அருள்மிகு குற்றம்பொறுத்தநாதர் திருக்கோயில், தலைஞாயிறு

இறைவன்: குற்றம் பொறுத்த நாதர்                  
இறைவி: கோல்வளைநாயகி அம்மன் 
தீர்த்தம்: செங்கழுநீர் தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 27 வது ஆலயம்.  ஊரின்பெயர் கருப்பறியலூராக இருப்பினும், கோயிலுக்குக் கொடிக்கோயில் என்று பெயர். முல்லைக் கொடியைத் தலக் கொடியாக உடைமையால் இப்பெயர்பெற்றது என்பர் ஒருசிலர். கோயில் அமைப்புப்பற்றி இப்பெயர்பெற்றது என்பர் வேறுசிலர். இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது. ஆனால் சூரியபகவான் வழிபட்டதால் தலைஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வழிபடுவோர் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்காமல் சிவனடி சேர்ந்து விடுவார்கள். அதனால் இவூர்க்கு திருக்கறுப்பறியலூர் பெயர்வந்தது.
          இறைவரது திருப்பெயர் குற்றம்பொறுத்தநாதர். ஒரு காலத்தில் இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன் முன் தோன்றினார். அவன் அதை அறிந்து கொள்ளாது வச்சிராயுதத்தை அவர்மேல் எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். அதைப்பொறுத்த காரணத்தால் இப் பெயர்பெற்றார்.
         இத்தலத்தில் செய்யும்அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்று பிரம்மன் மூலம் அறிந்த வசிஷ்டர் இங்கு சிவலிங்கம் அமைத்து மெய்ஞ்ஞானம் பெற்றார். இக்கோயில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. 

தேவாரம்:   

நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையளவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 10.கி.மீ. தொலைவில் உள்ள பட்டர்வதியில் இருந்து 1.கி.மீ. தொலைவில்  இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன. காரிலோ ஆட்டோவிலோ செல்வது சிறந்தது. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, மயிலாடுதுறை மாவட்டம் 609201.

தொலைபேசி:

என் .வெங்கடேச குருக்கள்:  04364 258833, 9443190169

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...