கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் முக்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்காக இறைவன் நடத்திய தலம் இத்தலமேயாகும். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார். எனவே இவரை வணங்குவோருக்கு ஏராளமான செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மகா சிவராத்திரியும், மார்கழி மாதம் திவாதிரையும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இத்தலத்தில் சனீஸ்வர பகவானும், சூரிய பகவானும் சிவனை வழிபட்டப்படி இருப்பது சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்து இறைவனை வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் இக்கோயில் உள்ளது.
தங்கும் வசதி:
காஞ்சிபுரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.