அருள்மிகு உச்சிவனேஸ்வரர் திருக்கோயில், விளநகர்

இறைவன்: துறைக்காட்டும் வள்ளலார், உச்சிவனேஸ்வரர்              
இறைவி: வேயிறுதோளியம்மை
தீர்த்தம்: காவிரி 
பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 40 வது ஆலயம்.  இறைவன்  திருப்பெயர் துறை காட்டும் வள்ளலார். அருள் வித்தகர் என்னும் அந்தணர் பூக்கூடையை எடுத்துக் கொண்டு காவிரி யாற்றில் இறங்கி வந்தபோது, வெள்ளம் அவரை அடித்துக் கொண்டு சென்றது. அவரோ பூக்கூடையை விடாது சிவபெருமானையே சிந்தித்தார். அவருக்கு இறைவர் ஒரு துறையை காட்டிக் கரையேறச் செய்து ஞான உபதேசம் செய்தருளிய காரணத்தால், இப்பெயரை இத்தலத்து நாயகர் பெற்றார். “காவிரித்துறை காட்டினார்” என்று இவ்வூர்த் தேவாரத்திலும் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தலம் தருமை ஆதீன  கோயிலாகும். 

தேவாரம்:   

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில், விளநகர், மன்னம்பந்தல்  வழி,  மயிலாடுதுறை மாவட்டம் 609305.

தொலைபேசி:

கே.தண்டபாணி குருக்கள் – 04364  282189

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...