இறைவன்: | வலம்புரநாதர் |
இறைவி: | வடுவகிர் கண்ணம்மை |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 44 வது ஆலயம். திருமால் சிவனை குறித்து தவம் செய்து சக்ராயுதமும் கதையும் பெற்றார் பின் இத்தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்து சங்கும் பத்மமும் பெற்றார் . ஹேரண்ட முனிவர் திருவலஞ்சுழி யில் காவேரியில் இறங்கி இங்கே கரையேறினார். இவர் முடியில் உள்ள உண்டான பள்ளம் இறைவன் முடியிலும் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணி தைலமும் புனுகு சட்டமும் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் பொழுது குவளை சாத்தி செய்வதால் இத்தலம் மேலப்பெரும்பள்ளம் என்று அழைக்க படுகிறது. இத்தலத்தில் பிச்சாண்டவர் மிகவும் அழகு ஆதலால் இவர் அர்த்தநாரீஸ்வர பிச்சாண்டவர் என்று பெயர்.
தேவாரம்:
எனக்கினித் தினைத்தனைப்
புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும்
பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க்
கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன
திடம்வலம் புரமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழி பூம்புகார் சாலையில் 20.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், மயிலாடுதுறை மாவட்டம் 609107.
தொலைபேசி:
04364-200890