அருள்மிகு ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழை திருக்காட்டுப்பள்ளி

இறைவன்: ஆரண்யசுந்தரேஸ்வரர்
இறைவி: அகிலாண்டநாயகி
தீர்த்தம்: அமிர்த பொய்கை
பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 12 வது ஆலயம். இறைவன் சுயம்பு மூர்த்தி. சதுர பீடத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் உள்ளது. ஒரு லிங்கத்தில் இரண்டு பாணங்கள் உள்ளது சிறப்பு. பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்த தேவர்கள் இந்திரனிடம் அவர்களை காக்க வேண்டினார். இந்திரனும் விருத்தாசுரனை சம்ஹராம் செய்தார். இதனால் சாபம் ஏற்பட்டு தேவலோக தலைமை பதவியும் பறி போயிற்று . குருவிடம் ஆலோசனை படி பூலோகத்தில் பல சிவ தலங்களை தரிசித்து வந்தான்.  அடர்ந்த காடுகளின் நடுவே சிவன் சுயம்பு மூர்த்தியாக கண்டு சிவ பூஜை செய்தான். சிவபெருமான் நியாய செயல்களுக்கு பாவ பலன் கிடையாது என்று அருள் செய்தார்.

          இறைவி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள் செய்கிறார். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் காட்சி தருவது சிறப்பு. இவர் ராஜயோக தக்ஷிணாமூர்த்தி. இந்த சன்னதிக்கு மேற்கே கடல் ஒலி சுவற்றில் இருந்து கேட்க்கிறது. ஒரு சாபத்தால் நண்டு வடிவம் கொண்டு வழிபட்டதால் நண்டு விநாயகர் என்று பெயர் வந்தது. விநாயகரின் பீடத்தில் நண்டு உள்ளது.

தேவாரம்:   

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழி பூம்புகார் சாலையில் 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழை திருக்காட்டுப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டம் 609114.

தொலைபேசி:

94439 85770  04364-256273

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...