அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பல்லவனீச்சரம்

இறைவன்: பல்லவனேஸ்வரர்
இறைவி: சௌந்திரநாயகி
தீர்த்தம்: ஜானவி, சங்கம  தீர்த்தங்கள்
பாடியோர்: திருஞானசம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 10 வது ஆலயம். இறைவன் கடலை நோக்கிய நிலையில் அருள் பாலிக்கிறார். நவகிரகங்கள் அனைத்தும் இறைவனை நோக்கி இருப்பது சிறப்பு.

          சிவனே, சிவசருமர் சுசீலை என்பவர்களின் மகனாக அவதரித்து மருதவாணர் என்று பெயர் பெற்றார். பின்பு பெரிய கடல் வணிகரான திருவெண்காடருக்கு தத்து பிள்ளையானார். தந்தையை போலவே கடல் வணிகம் செய்யலானார். ஒரு நாள் வியாபாரம் செய்து விட்டு வீட்டில் ஒரு பெட்டியை கொடுத்து விட்டு சென்றார். திருவெண்காடர் ஆசையாக அதில் உள்ள செல்வங்களை எடுக்க எண்ணி பெட்டியை திறந்த பொழுது தவிட்டு உமியை கொண்ட எரு இருந்ததை கண்டு கோபமுற்று பெட்டியை தூக்கி எறிந்தார். அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று இருந்ததை கண்டு திருவெண்காடருக்கு மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியை கூட எடுத்து செல்லமுடியாது என்ற உண்மை புலபட்டது. உடனே இறைவனை குருவாக வரித்து துறவறம் மேற் கொண்டார். தனது இல்லற வாழ்க்கையை துறந்து முக்தி வேண்டினார். இறைவன் காட்சி தந்து உரிய நேரத்தில் முக்தி கிடைக்கும் என்று அருளினார். பின்பு பட்டினத்தாராக திருத்தல யாத்திரை மேற்கொண்டு இறுதியில் சென்னை திருவொற்றியூரில் முத்தி அடைந்தார்.

தேவாரம்:   

அங்க மாறும் வேதநான்கும் 
  ஓதும் அயன்நெடுமால்  
தங்க ணாலும் நேடநின்ற 
  சங்கரன் தங்குமிடம் 
வங்க மாரு முத்தம்இப்பி 
  வார்கட லூடலைப்பப்  
பங்கமில்லார் பயில்புகாரிற் 
 பல்லவ னீச்சரமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் 20.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.  ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பல்லவனீச்சரம், மயிலாடுதுறை மாவட்டம் 609105.

தொலைபேசி:

94437 19193

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...