அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சாய்க்காடு

இறைவன்: சாயாவனேஸ்வரர்   
இறைவி: குயிலினும்  நன்மொழியம்மை
தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தங்கள்
பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 9 வது ஆலயம். காசிக்கு சமமான ஆறு தலங்களில் இதுவும் ஒன்று. இல்லையே என்னாத இயற்பகை நாயனார் பிறந்து முக்தி அடைந்த தலம் . இவரது மனைவியும் சிறந்த சிவபக்தை இவர்களது பக்தியை உலகத்திற்கு எடுத்து காட்ட விரும்பி சிவபெருமான் ஒரு நாள் சிவனடியார் வேடமிற்று இவர்களது இல்லம் வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதை எல்லாம் அள்ளி கொடுப்பவன் ஆயிற்றே ஆகையால் உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்று கேட்டார். இதற்கு அவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என இயற்பகையார் கேட்க அதற்கு சிவனடியார் நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என்னை தாக்க கூடும் , ஆகையால் நீ ஊர் எல்லை தாண்டும் வரை எங்களுக்கு காவலாக வரவேண்டும் என்று கூறினார். இயற்பகையாரும் அவ்வாறே சிவனடியார் தன் மனைவியுடன் முன்னே செல்ல அவர் பெரிய வாளுடன் பின்னே சென்றார். எதிர்த்த உறவினர்களை தோற்கடித்து அவர்களை ஊர் எல்லையில் விட்டபொழுது சிவனடியார் நீ திருப்பி போ என்று கூற சிவனடியாரும் அப்படியே செய்தார். அப்போது சிவனடியார் உமையவளுடன் வானத்தில் காட்சி தந்து நீங்கள் பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து என் திருவடி சேருங்கள், உன்னுடைய பெருமையாய் உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம் என்று கூறி மறைந்தார்.

          இந்திரனின் தாயான அதிதிக்கு சாயாவனரை வழிபட ஆசையால் அவர் இங்கு வந்து தங்கி வழிபட்டார் . தாயாரை காணாத இந்திரன் அவர் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து இந்த கோயிலின் அருமையை அறிந்து தன் தாய் தினமும் வழிபட ஏதுவாக இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் செல்ல முயற்சிக்கும் போது இறைவி குயில் போல கூவினாள். இறைவன் இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு செல்லாமால் நீ இங்கு வந்து வழிபடு என்று பணித்தார். இறைவி குயில் போல் கூவியதால் இறைவிக்கு குயிலினும் நன்மொழியம்மை என்றபெயர்வந்தது. கோயிலை ஒட்டி தேர் போன்ற விமானம் சக்கரத்துடன் உள்ளது.

           இத்தலத்தில் வில் ஏந்திய வேலவன் போருக்கு செல்லும் நிலையில் சத்ருசம்ஹாரமூர்த்தியாக காட்சி தருகிறார் . வலது காலில் எதிரிகளை அழிக்க சிவபெருமான் கொடுத்த வீரகாண்டமணி அணிந்திருக்கிறார். இறைவன் சுயம்பு மூர்த்தி. இது மாடக்கோயில். இந்த கோயிலுக்கு அருகில் பூம்புகார் காவல் தெய்வமாகிய சம்பங்கி அம்மன் கோயில் உள்ளது.

தேவாரம்:   

தோடுலா மலர்கள் தூவித் 
   தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று 
   மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் 
   பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் 
   சாய்க்காடு மேவி னாரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழி பூம்புகார் சாலையில் 20.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் நகர பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை மாவட்டம் 609105.

தொலைபேசி:

04364 260151

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...