இறைவன்: | அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர் |
இறைவி: | அழகிய பொன்னழகி |
தீர்த்தம்: | தென்பெண்ணை |
பாடியோர்: | சம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 12 வது ஆலயம். மகாபலியை கொன்ற தோஷம் தீர, பிரிந்து இருந்த மகாலட்சுமி உடன் மகாவிஷ்ணு, சிவனை வேண்ட, இருவருக்கும் சிவன் காட்சி தந்த தலம். பாண்டவர்கள் வனவாசம் போனபோது இங்கு வந்தனர். பஞ்ச பாண்டவர்கள் குகை என்று ஐந்து அறைகளும் திரெளபதைக்கு சிறிய அறையும் ஒரு சுனையும் காணபடுகிறது. அறைகள் உள்ளதால் அறையணிநல்லூர் என பெயர் வந்திருக்கலாம். ரமணரை ஆட்கொண்ட தலம்.
திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடி விட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால் முடியாததால் இங்கிருந்தே இந்த கோயிலில் அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையில் அருள் புரியும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மையை குறித்து பதிகம் பாடினார். முருகர் ஒருமுகம் ஆறு முகத்துடன் காட்சி தருகிறார். இங்கு விநாயகர் சுவரிலியே அமைந்துள்ளது. எங்கிருத்து பார்த்தாலும் விநாயகர் நம்மை பார்ப்பார். மெய்பொருள் நாயனார் மற்றும் நரசிங்க முனயரையர் ஆட் கொள்ள பட்ட தலம். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.
தேவாரம்:
என்பினார்கனல் சூலத்தார் இலங்கு மாமதி உச்சியான்
பின்பினாற் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி யென்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் முர்த்தி தன் தாள்களுக்கு
அன்பினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவர்களே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருக்கோயிலூர் சிவன் கோயில் எதிர்புறத்தில் தென்பெண்ணை நதியின் மறு கரையில் இக்கோயில் உள்ளது.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அரகண்டநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 605752.
தொலைபேசி:
காசி குருக்கள் – 9965144849
சங்கர் குருக்கள் 9842309534