இறைவன்: | மருந்தீஸ்வரர் |
இறைவி: | ஞானாம்பிகை |
தீர்த்தம்: | சிற்றிடை |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 13 வது ஆலயம். கைலாசத்தில் சிவன் பார்வதிக்கு சிவ உபதேசம் செய்யும் பொழுது கிளி வடிவம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால், அவரை பூமியில் பிறக்க சாபம் இட்டார். சாபவிமோசனம் வேண்ட சிவன் முனிவரை வேத வியாசருக்கு மகனாக பிறந்து இந்த தலத்தில் மருத மரத்தின் அடியில் தவம் இருந்து தம்மை பூஜித்தால் பூலோக வாழ்வில் இருந்து நீங்க வரம் தந்தார். அதன் படி சுகப்பிரம்ம முனிவர் இங்கு வாழ்ந்து பின்பு கைலாயம் சென்றார். இங்கு சிவன், பார்வதி சன்னதிக்கு நடுவே முருகருக்கு பதிலாக பிள்ளையார் பலாச்சுளை பாலகணபதி என்ற பெயரில் அருள் செய்கிறார். முருககடவுளை கலியுகராமப் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். அகத்தியர் ஸ்தாபித்த லிங்கமும் உள்ளது. நெடுநாட்களாக திருமணம் கை கூடி வராதவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்தால் பலன் உண்டு. மறைஞானசம்பந்தர் அவதரித்த ஊர்.
தேவாரம்:
தேசனூர் வினை தேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நாள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருகோயிலூர் – திருவெண்ணைநல்லூர் வழியாக அரசூர் செல்லும் சாலையில் சித்தலிங்கமடத்திற்கு அடுத்த ஊர். திருக்கோயிலூரிலிருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு மருந்தீஸ்வரர் தேவஸ்தானம், டி.எடையார் அஞ்சல், பெரிய செவலை வழி, திருக்கோயிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 607209.
தொலைபேசி:
ஞானஸ்கந்தகுருக்கள் – 04146 – 216045, 9442423919, 9884777078