இறைவன்: | கடைமுடிநாதர் |
இறைவி: | அபிராமவள்ளியம்மை |
தீர்த்தம்: | கருணா தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 18 வது ஆலயம். சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலமாய்க் காவிரியின் கடைமுடியாதலின் இப்பெயர் பெற்றது. பிரமன் பூசித்துப் பேறுபெற்றதலம். ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்றதால் அவருக்கு தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கும் என்று கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் என்ற ஆதிசிவன் காட்சிஅளித்தார். இத்தலத்தில் காவிரி மேற்கு நோக்கி ஓடுவது சிறப்பு. சுயம்புமூர்த்தியாக சிவபெருமான் பதினாறு பட்டைகளுடன் சோடஷ லிங்கமாக உள்ளார் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி பெருமான் இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் அணியாமலும் உள்ளார்.
தேவாரம்:
பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ லடிகளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், திருக்கடைமுடி (கீழையூர்), மயிலாடுதுறை மாவட்டம் 609304.
தொலைபேசி:
அமிர்தகடேச குருக்கள்: 9442779580, 04364 283261