இறைவன்: | கண்ணாயிரமுடையார் |
இறைவி: | முருகுவளர் கோதைநாயகி |
தீர்த்தம்: | இந்திர தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 17 வது ஆலயம். சிவலிங்க திருமேனி முழவதம் கண்கள் (1000) போன்ற பள்ளங்கள் உள்ளது. ஆயிரம் கண்கள் கொண்ட பெருமான். எனவே கண் நோய்க்கு பரிகார ஸ்தலம். இந்திரன் அகலிகையுடன் கூடியதால் ஏற்பட்ட தோஷம் நீங்கி அவனுக்கு சாபத்தால் ஏற்பட்ட 1000 குறிகளும் 1000 கண்களாக மாறி சாபம் தீர்ந்த தலம் .
அம்மன் சன்னதிக்கு மேல் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்க பட்டுள்ளது. அனைத்து ராசிக்காரர்களும் தோஷம் நீங்க அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமணமூர்த்தியான குருமாணி வழிபட்டதால் குறுமாணக்குடி என்ற பெயர் வந்தது.
தேவாரம்:
தண்ணார் திங்கட் பொங்கர
வந்தாழ் புனல்சூடிப்
பெண்ணா ணாய பேரரு
ளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழு
வோர்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை
யாய நணுகும்மே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
வைத்தீஸ்வரன் கோயிலில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குருமானிக்குடி, மயிலாடுதுறை மாவட்டம் 609117.
தொலைபேசி:
9442258085