இறைவன்: | சிவலோகநாதர் |
இறைவி: | சொக்கநாயகியம்மை |
தீர்த்தம்: | கணபதி தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 20 வது ஆலயம். நந்தனார் மேல ஆதனுர் என்ற கிராமத்தில் தாழ்த்தபட்ட குலத்தில் பிறந்தவர்,. சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க வேண்டும் என்ற சிவபக்தர். கூலி வேலை செய்பவர் ஆதலால் முதலாளியிடம் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்று இருந்தார். ஆகையால் திருநாளைப்போவார் என்ற பெயரும் உண்டு. ஒரு நாள் முதலாளியிடம் சிதம்பரம் செல்ல அனுமதி கிடைத்தவுடன், சிதம்பரம் செல்லும் வழியில் திருப்புன்கூர் கோயிலுக்கு வந்தார். தாழ்த்தபட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. வெளியே இருந்தே ஸ்வாமி தரிசனம் செய்ய எட்டி எட்டி பார்க்கிறார். ஸ்வாமி தெரியவில்லை, முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைப்பதால் என்ன செய்வது என்று இறைவனிடம் முறையிடுகிறார். மலை போல் நந்தி படுத்திருக்கிறதே என்று பாடுகிறார் . துவாரபாலகர்கள் நந்தனார் வந்திருக்கிறார் என்று இறைவனிடம் கூற நந்தியை சற்றே விலகியிருக்க பணித்தார். நந்தியும் விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் .
சுந்தரருடன் வெகுண்ட ஏயர்கோன் கலிக்காமூர் இந்த கோயிலுக்கு மழை வேண்டியும் பெய்த மழை அளவிற்கு மீறி வெள்ளம் வந்தாலும் முறையே பன்னிருவேலி நிலங்கள் தந்த பெருமை பெற்றது. பின்பு சுந்தரருடன் நண்பராகி கலிக்காமூர் இந்த கோயில் இறைவனை வணங்கி பல திருப்பணிகள் செய்தார். மூலவர் புங்க மர காட்டில் புற்று வடிவமாக உள்ளார். ஆகையால் திங்கள் கிழமைகளில் இரவு குவளையை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்துவார்கள்.
தேவாரம்:
பவளவண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழுக ரென்னும் அடிகள் அவர்போலும்
புகழ் நின்ற புரிபுன் சடையாரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் நகர பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
வைத்தீஸ்வரன் கோயிலில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609112.
தொலைபேசி:
94887 17634