கோயிலின் சிறப்புகள்:
வேண்டுவோர்க்கு கற்பக விருட்சமாய் வரம் தரும் விநாயகர் என்பதால் கற்பக விநாயகர் என்ற பெயர் பெற்ற விநாயகர் வீற்றிருக்கும் இக்கோயில் ஒரு பழமையான குடைவரை கோயிலாகும். அமர்ந்த நிலையில் இரண்டு கைகளை மட்டும் கொண்டு வலம்புரியாய் வீற்றிருப்பது இங்கு சிறப்பாகும். இத்தலம் குபேரன் வழிபட்ட தலமாதலால், இவ்விநாயகரை வழிபட்டால் சகல செல்வங்களும் தேடி வரும் என்பது சிறப்பாகும். சிவன் மருதீசராகவும் அம்மன் வாடாமலர் மங்கையாகவும் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். மருதீசராகிய சிவன் சகல வியாதிகளையும் தீர்க்க வல்லவர். லக்ஷ்மி சரஸ்வதி மற்றும் பார்வதி மூன்று பேரும் சேர்ந்து காணப்படுவது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும். இத்தலத்தில் உள்ள காத்தாயினி அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் மஹேந்திர பல்லவர் காலத்தில் உறுவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பலன்கள்:
இங்குள்ள பிள்ளையாருக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட்டால் அணைத்து பிணிகளும் நீங்கும். பிள்ளையார் மேல் அபிஷேகம் செய்யப்பட்டு தரப்படும் விபூதி சகல துன்பங்களையும் போக்கி சகல செல்வங்களும் தர வல்லது.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இத்திருக்கோயில் திருப்பத்தூர் காரைக்குடி மார்க்கத்தில் குன்றக்குடிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் அணைத்து ஊரிலிருந்தும் காரைக்குடிக்கு பேருந்து வசதி உண்டு. காரைகுடியிலிருந்தும் திருப்பத்தூரில் இருந்தும் நகர பேருந்தில் செல்லலாம். சென்னையிலிருந்து காரைக்குடிக்கு பல்லவன் விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில் போன்ற ரயில்கள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
கோயிலின் முகவரி:
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம் 630207.
தொலைபேசி:
04577-264240, 264241, 264182, 264797