அருள்மிகு கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை

இறைவன்: கொடுங்குன்றீசர்   
இறைவி: குயிலமுதநாயகி  
தீர்த்தம்: அடையவளந்தான் திருக்குளம்  
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 5 வது ஆலயம். மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி. இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புகள் சொர்க்கம் – (மங்கைபாகர்), அந்தரம் – (பைரவர்), பூமி – (கடோரகிரீஸ்வரர்) என்று அழைக்கப்பட்டு சுவாமி எழுந்தருளியுள்ளார். மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன. “பெயரில்லா மரம்” மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால்  “பெயரில்லா மரம்” என்றே அழைக்கின்றனர் . மங்கைபாகர் சிலை நவமூலிகைகளால் செய்யப்பட்டது. அபிஷேகம் கிடையாது . பௌர்ணமி அன்று புனுகு சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. எங்கும் காணமுடியாத அற்புதமான மங்கைபாகர் சிலை. .மகோதர மகரிஷியும், நாகராஜனும் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணியத் தலமாகும். மலை நடு பகுதியில் வடுக வைரவர் சந்நிதி மிக விசேஷம். ஏறுவதற்கு கடினமான மலைபாதை. மலையுச்சிக்கு 5 கீமீ செங்குத்தாமான மலைபாதை. சித்தர்கள் பலர் இன்றும் இம்மலையில் சூட்சமாக வாழ்வதாக நம்பப்படுகிறது. முல்லைக்கு தேர் ஈந்த பாரி வள்ளல் வாழ்ந்த ஊர். இத்திருக்கோயில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடாதிபதிகள் ஆளுகையில் உள்ளது . 

தேவாரம்:   

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல் 
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாவெயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
பெருமானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மதுரை பொன்னமராவதி சாலையில் மேலூரிலிருந்து 28கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மேலூர் மற்றும் திருப்பத்தூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மதுரை, மேலூர் மற்றும் திருப்பத்தூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00, மலைக்கோயில் மாலை 6.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். 

கோயிலின் முகவரி:

அருள்மிகு  கொடுங்குன்றீசர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம் 624503.

தொலைபேசி:

சி . உமாபதி சிவாச்சாரியார் 9443191300 , 04577 – 246170.

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...