அருள்மிகு கஸ்தூரிரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த மகரிஷிகள் சிலர் வாசலில் காவல் இருந்த ஜெயன் விஜயன் ஆகியோரைக் கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவரை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள் அவர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன், இரண்யாட்சன், ராவணன், கும்பகர்ணன், கம்சன், சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு ஜெயன் விஜயன் ஆகிய இருவரும் கருவறைக்குள்ளேயே தாழ் பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம். கோபக்காரர் என்ற பெயர் பெற்ற துர்வாச முனிவரின் கோபத்தை தனித்த பெருமாள் கோவத்தால் வரும் கேட்டை விளக்கினார். அதைக்கேட்ட துர்வாச முனிவரும் மனம் திருந்தினார். அவ்வாறு மணம் திருந்திய துர்வாசர் சாந்த சொரூபியாய் இத்தலத்தில் வீற்றிருப்பது சிறப்பாகும். இத்தலத்தில் ஆஞ்சநேயர் லிங்கப்பாறை ஆஞ்சநேயர் என்ற பெயருடன் லிங்க வடிவில் பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருவது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும். 

பலன்கள்:

இத்தலத்து இறைவனை வழிபட்டால் கோப குணம் கொண்டவர்கள் தன் கோபம் தொலைத்து சாந்த சொரூபியாய் திகழ்வர் என்பது ஐதீகம். 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 1 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. 

தங்கும் வசதி:

ஈரோட்டில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் திருக்கோயில்,

ஈரோடு – 638001

தொலைபேசி: 

0424 – 2267 578, 2264 090

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

இறைவன்: சௌந்திரராஜ பெருமாள் இறைவி: சௌந்திரவல்லி தாயார் தீர்த்தம்: சார புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்   கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம்...

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

இறைவன்: லோகநாத பெருமாள் இறைவி: லோகநாயகி தாயார் தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி...

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்ய புஷ்கரணி தீர்த்தம் மங்களாசாசனம்: பெரியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் கோயிலின் சிறப்புகள்:      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நீலமேக பெருமாள்...