அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், தென் திருமுல்லைவாசல்

இறைவன்: திருமுல்லைவனநாதர்
இறைவி: சத்தியானந்தசரஸ்வதி
தீர்த்தம்: பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 7 வது ஆலயம். கரிகால சோழனின் பாட்டனார் கிள்ளிவளவன் தனது நோய் தீர இத்தலத்தில் உள்ள கடற்கரையில் நீராட வந்த பொழுது முல்லை கொடிகளில் குதிரை குளம்புகள் மாட்டிக்கொள்ள குதிரைகள் நகர முடியவில்லை. முல்லை கொடிகளை கிள்ளிவளவன் வெட்டும் பொழுது அதன் கீழே இருந்த சுயம்பு மூர்த்தியின் மேல் வாள் பட்டு ரத்தம் பெருகியது. தெரியாமல் தவறு செய்துவிட்டொமே என்று தன்னையே வாளால் வெட்ட முற்பட்டபோது ஈசன் உமையொடு காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். ஆதலால் இத்தலத்திற்கு திருமுல்லைவாசல் என்ற பெயர் வந்தது. இன்றும் சுயம்புமூர்த்தியாக காட்சி தரும் 3 ½ அடி உயர சிவலிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காய அடையாளத்தை காணலாம்.

          பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள இறைவனை இறைவி வழி பட்டதால் சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். இறைவன் குருவாக இருப்பதால் இங்கு பள்ளியறை கிடையாது. கார்கோடகனும் சுதர்மனும் வழிபட்ட தலம்.

தேவாரம்:   

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் 
     அயனைப் படைத்த பரமன்  
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு     
     அரவிக்க நின்ற அரனூர்        
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி            
     யவையோத மோத வெருவித்        
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்   
     திருமுல்லை வாயி லிதுவே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தங்கும் வசதி:

அருகிலுள்ள சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல், சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609113.

தொலைபேசி:

ஆத்மநாதகுருக்கள்: 94863 39538, 04364-264138

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...