அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி

இறைவன்: திருமேனியழகர்
இறைவி: வடிவாம்பிகை
தீர்த்தம்: மகேந்திரப்பள்ளி தீர்த்தம்
பாடியோர்: திருஞானசம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 6 வது ஆலயம். சுவாமி மற்றும் அம்பாள் இங்கு அழகாக காட்சி தருவதலால் திருமேனியழகர் , வடிவாம்பிகை என்று பெயர். ஞானசம்பந்தர் ஸ்வாமியை அழகர் என்று பாடியிருக்கிறார். சூரியன், சந்திரன், பிரம்மா , இந்திரன் வழிபட்டதலம் . இந்திரன் தன் சாபம் நீங்க இங்கேயும் லிங்க ப்ரதிஷ்டை செய்து வணங்கிய தலம் அருணகிரிநாதர் இத்தலத்து இறைவனை பற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

தேவாரம்:   

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
   கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
     செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சீர்காழியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தங்கும் வசதி:

அருகிலுள்ள சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 9.00 – 12.00 மற்றும் மாலை 6.00 – 7.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609101.

தொலைபேசி:

ஏ .குருசாமி  குருக்கள். : 04364-292309

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...