இறைவன்: | சுந்தரேஸ்வரர் |
இறைவி: | அழகம்மை |
தீர்த்தம்: | அம்புலி தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 8 வது ஆலயம். “கலி” (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், “திருக்கலிக்காமூர்” என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன. இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலகர் போல் இரண்டு விநாயகர் இருப்பது எங்கும் காணாத அபூர்வம். பராசரர் அசுரனை அழித்த தோஷம் நீங்கிய தலம்.
தேவாரம்:
மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் னருளாமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9.00 – 10.00 மற்றும் மாலை 6.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
ராஜாமணி குருக்கள்: 93605 77673, செந்தாமரை கண்ணன் : 04364 – 292179