இறைவன்: | சிவலோக தியாகராஜசுவாமி |
இறைவி: | திருவெண்ணீற்று உமையம்மை |
தீர்த்தம்: | வியாச மிருகண்ட தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 5 வது ஆலயம். இறைவன் சுயம்பு மூர்த்தி. பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வர் அமைந்திருப்பது சிறப்பு. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தர் தனது திருமணத்தின் போது திருமணத்திற்கு வந்தவர்களுடன் சிவஜோதியில் கலந்த தலம். இதைத்தான் கூண்டோடு கைலாசம் என்று கூறுவார்கள். ஆச்சாள் என்பது தாயை குறிக்கும். இந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தன் கையால் விபூதி பிரசாதம் வழங்கினார். ஆகையால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயரும் ஊருக்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் வந்தது. இங்கு அம்மன் சன்னதியிலும் விபூதிதான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் தனது மனைவி மங்கையுடன் அருள் புரிகின்றார். திருமால், பிரம்மா , சந்திரன், இந்திரன், கங்காதேவி,வசிஷ்டர், பிருகு, ஜாமத்கானி, பராசரர் ஆகியோர் வழிபட்ட தலம். இந்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம். இந்த கோயில் தருமை ஆதின கோயிலாகும்.
தேவாரம்:
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் பெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
சீர்காழியில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609101.
தொலைபேசி:
கண்காணிப்பாளர் தருமை ஆதினம் : 04364-277800