அருள்மிகு நெல்வெண்ணையப்பர் திருக்கோயில், திருநெல்வெண்ணை

 

 

 

 

இறைவன்: வெண்ணையப்பர்
இறைவி: நீலமலர்கன்னியம்மை
தீர்த்தம்: வெண்ணை தீர்த்தம்
பாடியோர்: சம்பந்தர்

  

 கோயிலின் சிறப்புகள்:

     தேவார பாடல் பெற்ற நடு  நாட்டு ஆலயங்களில் 10 வது ஆலயம். ஒருகாலத்தில் நல்ல விளை நிலங்கள் நிறைந்த ஊர்.  மக்கள் நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆதனால் இறை வழிபாட்டை மறந்து விட்டனர் அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த இறைவன் வருண பகவானை மழை பெய்யுமாறு பணித்தார் . தொடர்ந்து பெய்த கனமழையால் ஊரின் நடுவே உள்ள  பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் தங்களை காக்க இறைவனை வேண்டி மன்றாடினார். இறைவன் மனமிரங்கி இளைஞனாக மாறு வேடமிட்டு அவர்கள் அனைவரின் விட்டில் உள்ள நெல் மூட்டைகளை பெற்று ஏரியின் கரையை அடைத்தார். வருண பகவானை மழையை நிறுத்த கூறியாதல் மழையும் நின்றது. மக்கள் சொத்து சுகங்களையும் இழந்தாலும் இளைஞனின் சேவையை பாராட்டி அவனையே தெய்வம் என்று கூறி வணங்கினர். இளைஞன் அவர்களிடம் உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே, அவனை எந்த நிலையிலும் மறக்காதிர்கள் என்று கூறி மக்களுக்கு சொர்ணம் (தங்கம்) நிரம்பிய குடங்களை குடுத்து இழந்த செல்வங்களை திரும்ப பெற்று கொள்ளுங்கள்    என்று கூறினார்.  குழம்பிய மக்களுக்கு தன் சுயரூபம் காட்டி அங்கேயே எழுந்தருளினார். பின்பு அவருக்கு அங்கேயே மக்கள் ஆலயம் ஸ்தாபித்தார்கள்.  சொர்ணம் தந்ததால் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. நெல்வெண்ணெய்நாதர் என்ற பெயரும் உண்டு.

இறைவன் சுயம்பு லிங்கம். ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார். சிவனே வந்து நெல்லை அணையாக கட்டியதால் நெல் அணை என்ற பெயர் பின்னாளில் நெய்வணை என்று மாறி இருக்கலாம். இரவில் வந்த சம்பந்தப்பெருமானை வழிகாட்டி அம்மனே அழைத்து வந்ததால் இறைவன் ஆனந்த நடனம் அடிய கோலத்தில் உள்ளார்.

இறைவனை தரிசிக்க வாயிலில் திருமகளை மடியில் அமர்த்தி லக்ஷ்மி நாராயணபெருமளாக காட்சி தருகிறார். இங்கு வந்து இறைவனை வேண்டிகொண்டால் செல்வத்தை வாரி வழங்குவார். ஒன்றை பத்தாக்கும் ஆற்றல் கொண்டவர். பொற்குடம் கொடுத்த நாயனார் என இறைவன் பெயரை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

 

தேவாரம்:  

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே
ஊர் மல்கி உறைய வல்லீருமையுள்குதல்
     பார்மல்கு புகழவர் பண்பே       

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

உளுந்தூர்பேட்டையில் இருந்து நெமிலி வழியாக ரிஷிவந்தியம் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. உளுந்தூர்பேட்டையிலிருந்து காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்வது சிறந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து  உள்ளது.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 9.00 மற்றும் மாலை 4.00 – 8.00

 

கோயிலின் முகவரி:

அருள்மிகு நெல்வெண்ணையப்பர் திருகோயில், நெய்வெணை கிராமம், கூவாடு அஞ்சல், எறையூர் வழி, உளுந்தூர் பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 607201. 

 

தொலைபேசி:

சபாபதி குருக்கள் 04149-291786,  04149-2090907,   94862 82952

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...