அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இக்கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சாரபரமேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். மார்கண்டேயர் வழிபட்ட தலம். மார்கண்டேயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ரினவிமோசனர் என்ற பெயரில் கோயில் பிரகாரத்தில் உள்ளது. இந்த இறைவனை வழிபட்டால் ஒருவரது பிறவிக்கடன் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். அதனாலேயே இக்கோயில் கடன் தீர்த்தார் கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை மற்றும் விஷ்ணு துர்க்கை மூவரையும் இக்கோயிலில் தரிசிக்கலாம் என்பது இங்கு சிறப்பு. மாசி மாதத்தில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி இறைவன் மீதும் அம்மனின் பாதத்திலும் விழும் என்பது தனிச்சிறப்பு. மேலும் இத்தலத்தில் உள்ள பைரவரின் கையில் திரிசூலம் மற்றும் மணி உருவம் பொரித்திருப்பது வேறெங்கிலும் காண கிடைக்காத சிறப்பு. இத்தலத்தில் உள்ள மாவிலங்கை மரம் வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கு வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்களுக்கு வெறும் வெள்ளை பூக்களாகவும், கடைசி நான்கு மாதங்களுக்கு பூ, இலை எதுவும் இல்லாமலும் காட்சியளிக்கும். 

பலன்கள்:

இத்தலத்திற்கு தொடர்ந்து 11  வாரம் திங்கள்கிழமையில் வந்து அர்ச்சனை செய்தால் கடன் நிவர்த்தி, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

இக்கோயில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 15 Km தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அணைத்து பேருந்துகளும் திருச்சேறையில் நின்று செல்லும். கும்பகோணத்திலிருந்து நகர பேருந்துகளும் உள்ளன. 

தங்கும் வசதி:

கும்பகோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். கும்பகோணத்தில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

 

கோயில் முகவரி: 

அருள்மிகு சாரபரமேஸ்வரர் கோயில்,

திருச்சேறை, கும்பகோணம் தாலுகா, 

தஞ்சாவூர் மாவட்டம், பின் – 612605

தொலைபேசி: 

0435 – 2468001

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...