கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் சிகாநாதர் என்ற திருநாமத்துடனும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். இக்கோயில் சிற்பக் கலையின் சிறப்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. நுழைவு வாயில் முதல் கருவறை வரை ஏராளமான கலைநயம் மிக்க சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். இத்தலத்தில் துவாரபாலகர்கள் எதிரும் புதிருமாக நின்று வாயிலைக் காப்பது சிறப்பாகும். நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. இத்தலத்தில்தான் சனீஸ்வரனால் சோதிக்கப் பட்ட நளன் இறைவனை வேண்டி அருள்பெற்றான் என்பது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்து இறைவனை வழிபட்டால் காதல் திருமணம் எந்த தடையுமில்லாமல் கைகூடும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 20 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள புதுக்கோட்டையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். புதுக்கோட்டையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம் – 622104
தொலைபேசி:
04322 221084, 98423 90416