அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி

இறைவன்:
சிவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி:
ஒப்பிலாநாயகி
தீர்த்தம்:
ஜாம்பவதீர்த்தம்
பாடியோர்:
சுந்தரர்

கோயிலின் சிறப்புகள்:

     தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 5 வது ஆலயம். பெரியான் என்ற உழவன் உழுது கொண்டிருக்கும்பொழுது ஒரு பெரியவர் வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவு படைக்கும் பழக்கம் உள்ள பெரியானும் அவரது மனைவியும் அவரை உணவு உட்கொள்ள அழைத்தனர். அதற்கு அந்த பெரியவர், தான் உழைக்காமல் உணவு பெற்று கொள்ளமாட்டேன், ஆகையால் உன் நிலத்தை நான் உழுது தருகிறேன், நீ உணவு எடுத்து வா என்று கூறினார். பெரியான் வீட்டுக்கு சென்று உணவு எடுத்து வந்து பார்க்கும் பொழுது நிலத்தில் திணை பயிர்கள் விளைந்து இருந்ததததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். சந்தேகத்துடனே கொன்றை மரத்தின் அடியில், இரு கால்களையும் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியவருக்கு உணவு படைத்தான். அவர் சாப்பிட்ட பின்பு எப்படி உடனே திணை பயிர் விளைந்தது என்று வினவ, பெரியவர் மறைந்து சிவனாக காட்சி தந்து தானே பெரியவராக வந்தது என்று கூறினார். பெரியானும் மகிழ்ந்து இங்கேயே எழுந்து அருளும்படி வேண்டினார். சிவனும் சுயம்பு லிங்கமாக எழுந்து அருளினார்.

     சிரித்த முகத்துடன் நடனமாடும் நடராஜாரின் கீழே பீடத்தின் மகாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும் பிரம்மா பஞ்ச முக வாத்யம் வாசிப்பது போலவும் சிறிய மூர்த்தங்கள் உள்ளன. இங்கு சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரியுடன் இணைந்து காணப்படுகிறார். விவசாயம் செழிக்கவும் நடனத்தில் சிறந்து விளங்கவும் கோயில் திறந்தவுடன் வேன்றிகொண்டால் நடக்கும் என்பது நம்பிக்கை.

தேவாரம்:

ஒன்றலா உயிர் வாழ்கையை நினைந்திட்டு
     உடல் தளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கென பேசும்
     இதவும் பொய்யெனவே நினை ஊளமே
குன்றுலாவிய புயமுடையானைக்
     கூத்தனைக் குலாவிக் குவலயத்தோர்
சென்றெலாம் பயில் திருத்தினை நகருள்
     சிவகொழிந்தினைச் சென்றடை மனனே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

கடலூர் – சிதம்பரம் சாலையில் 18வது கீ.மீ.ல் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில இறங்கி செல்லவேண்டும். மேட்டுபளையதிலிருந்து ஐந்து கீ.மீ. பஸ் வசதி எப்போதாவது உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி. கடலூர் மாவட்டம்.  608 801.

தொலைபேசி:

வெங்கடராமன் குருக்கள்   99653 28278, 99653 28279

எஸ்.சுந்தர்.  04142 – 289861, 97864 67593

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...