அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி

இறைவன்:
மாணிக்கவரதர், வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர்
இறைவி:
மாணிக்கவல்லி, உதவிநாயகி
தீர்த்தம்:
கெடிலம்
பாடியோர்:
சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

     தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 17 வது ஆலயம். இத்தலம் உதவி மாணிக்குழி என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடநாட்டு வணிகன் அத்ரி என்பவனிடம் கொள்ளை அடிக்க முயன்ற திருடர்களிமிருந்து இறைவன் காப்பாற்றியதால் இறைவன் உதவி நாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கபடுகிறார்கள். உதவி என்பது ஊர் பெயராக இருந்து பின்னால் மாணிக்குழி என்ற கோயில் பெயரே ஊர் பெயராக மாறி இருக்கலாம்.

     உலகத்தையே ஆண்ட மகாபலி ஒரு சிறந்த தர்ம சிந்தனை உடையவர். ஆனால் கர்வம் கொண்டவர். மகாபலியின் கர்வத்தை அடக்க மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். மகாவிஷ்ணு முதல் அடியால் பூமியையும் இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்து முன்றாவது அடி எங்கே என்று வினவ மகாபலி உலகத்தையே ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என தன்னுடைய தலையை காண்பித்தார். தன்னுடைய முன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை அழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க திருமால் இங்கு வழிபட்டதாலும் திருமாணிக்குழி என்ற பெயர் வந்தது.

     இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சிலவிநாடிகள் மட்டும் தரிசனம் செய்ய முடியும் இறைவனும் இறைவியும் இணைந்து இருப்பதால் அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர் இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை தீபாரதனை. கோயிலுக்கு எதிரே உள்ள மலையில் கார்த்திகை மாதம் ரோஹினி நக்ஷத்திரம் அன்று மலை மீது தீபம் ஏற்றபடுகிறது. சுயம்பு லிங்கம். சூரியனால் ஸ்தாபிக்கப்பட்டு அவராலேயே பூஜை செய்யப்பட்டது.

தேவாரம்:

மந்த மலர் கொண்டு வழிபாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்த மணிகண்டன் இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார் உதவிமாணிகுழியே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

கடலூரிலிருந்து  பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. கடலூர் மற்றும் பண்ருட்டியில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 11.00 மற்றும் மாலை 4.30 – 8.30

கோயிலின் முகவரி:

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி. கடலூர் மாவட்டம். – 607401.

தொலைபேசி:

கே.தியாகராஜ குருக்கள் 04142 – 274485,    99420 94516

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...