அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை

எழுதியவர்: தி.ஜெ.ரா

 

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் சுமார் 800 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு மலைக்கோயில் ஆகும். பாம்பாட்டிச் சித்தர் என்னும் சித்தர் இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை பாம்பு வைத்தியர் என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர் நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டை முனிவர் அவருக்கு காட்சி தந்து உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச் சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பின்னர் முருகன் இங்கேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மலைப் பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தருக்கு தனிச் சன்னதி உள்ளது. பாம்பாட்டிச் சித்தர் இன்றளவும் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். இக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற கோயில் என்பது சிறப்பாகும்.

பலன்கள்:

பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

கோயம்பத்தூரில் இருந்து 14KM தொலைவில் இக்கோயில் உள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

கோவையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மாலை 2.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் முகவரி:

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம் – 641046.

தொலைபேசி:

0422-2422490

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கோயில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள்,...

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

  இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம்    கோயிலின் சிறப்புகள்:         சிவாலயங்களில் முதன்மையானது.  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம் உலகின் பூமத்திய ரேகையின்...

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

கோயிலின் சிறப்புகள்:       இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய நந்தியையும் உடைய...