கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் மதுரை அழகர் கோயிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் மாவலி வாணாதிராயர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மன்னன் தினமும் மதுரை சென்று அழகரை தரிசிப்பது வழக்கம். ஒரு சமயம் உடல் நலம் சரியில்லாமல் போகவே மதுரை செல்ல முடியவில்லை. தன் நிலை கண்டு வருந்திய மன்னன் பெருமாளை வேண்டினான். திருமாலும் மன்னன் முன் தோன்றி மானாமதுரையிலேயே அழகர்கோயிலைப் போலவே ஒரு கோயில் கட்டி வழிபடுமாறு கூறினார். இக்கோயிலில் வழிபட்டால் மதுரை அழகர் கோயிலில் தரிசனம் செய்த பலன் கிட்டும் என்றும் கூறினார். மேலும் ஒரு எலுமிச்சையை வைகை ஆற்றில் விட்டு அது ஒதுங்கும் இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினார். எலுமிச்சையின் ஒரு பகுதி கோயில் உள்ள இடத்திலும் மற்றொரு பகுதி 4 KM தொலைவிலும் கரை ஒதுங்கியது. அதனால் இக்கோயிலின் குளம் 4 KM தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வடை மாலை ஒரு மாதமானாலும் கெடாது என்பது சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்திலுள்ள தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் தாமரைத்திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் 50 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. மதுரையிலிருந்தும், சிவகங்கையிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மானாமதுரையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.