இறைவன்: | வீரட்டேஸ்வரர் |
இறைவி: | இளங்கொம்பனையாள் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், காவிரி |
பாடியோர்: | திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 41 வது ஆலயம்.
அட்ட வீரட்டத்தலங்களில் இது 4 வது தலம் .தட்சன் வரம் தந்த சிவபெருமானையே மதிக்காமல் யாகம் செய்கிறான். கோபம் அடைந்து சிவன் வரத்தை பறித்து விடுகிறார்.. அதனால் இந்த ஊர் திருப்பறியலூர் என பெயர் பெற்றது. சிவபெருமானின் மனைவி தாட்சயாயினின் தந்தை தட்சன். யாகத்தின் போது கொடுக்கவேண்டிய முதல் மரியாதையான அவிர்பாகம் சிவனுக்கு கொடுக்காததால் அவர் கோபம் கொண்டு யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களையும் தட்சனையும் வீரபத்திரராக தண்டித்த தலம் திருப்பறியலூர் ஆகும்’. சிவபெருமானின் திருவடியில் தட்சன் விழுந்து கிடப்பது போன்ற சிற்பம் உள்ளது. சுப்பிரமணியர் திரு உருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்ற நிலையில் அருள் புரிகிறது. இது தருமை ஆதீன கோயிலாகும்.
தேவாரம்:
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்பனார்கோயிலில் இருந்து 2.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருப்பறியலூர் (பரசலூர்), செம்பனார்கோயில் அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம் 609309.
தொலைபேசி:
04364-281197,9943862486