அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை

இறைவன்:
வீரட்டேஸ்வரர்
இறைவி:
திரிபுரசுந்தரி
தீர்த்தம்:
கெடிலம் நதி
பாடியோர்:
அப்பர், சுந்தரர், சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

     தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 7வது ஆலயம். இறைவன் திருபுரத்தை எரித்த தலம். தாருகாட்சன், கமலாட்சன் மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் தவம் செய்து தங்களை யாரும் கொல்லவோ, வெல்லவோ கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றனர். அவர்களின் தொல்லையை தாங்க முடியாதவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். சிவன் பூமியை தேராகவும், சூரிய,சந்திரர்களை தேர் சக்கரமாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும், மற்ற தேவர்களையும், தேருடன் உடன் வர செய்தார். தேர் அச்சு முறிய பின்பு விநாயகரை வணங்கி பூஜை செய்து வில் அம்பு எதையும் பயன் படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிறிது சிரித்தவுடன் உலகமே நடுங்கும் படி தீப்பிழம்பு ஏற்பட்டு மூன்று அசுரர்களும் சாம்பலயினார். இந்த புராண வரலாறே திரிபுர சம்காரம் என கூறப்படுகிறது.

     திருவதிகை ஊருக்கு அருகே உள்ள திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் சேர்ந்து தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது தமக்கை திலகவதியார் சைவ சமயத்தில் இருந்து வீரட்டானேசுவரருக்கு கைங்கரியம் செய்து வந்தார். திலகவதியார் தான் தம்பியை நல் வழிபடுத்த இறைவனை வேண்டினார். திலகவதியாருக்கு உதவ நினைத்த இறைவன், சூலை கொடுத்து ஆட்கொள்வோம் என்று அருளி நாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்றுவலி) தாக்க வைத்தார். சமண சமயத்தவர் அவரது வயிற்று வலியை போக்க முயற்சி செய்தனர். ஆனால் வலி அதிகரித்தது. ஒரு நாள் அதிகாலையில் திருவதிகை சென்று தனது தமக்கை திலகவதியார் காலில் சரணடைந்து தனது வயிற்று வலியை போக்குமாறு வேண்டினார். திலகவதியாரும் வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தம்பியை அழைத்து சென்று ஒம் நமசிவாய என்று கூறி விபுதி பூசியும், உண்ண கொடுத்தும் அவரது வயிற்று வலியை போக்கினார். நாவுக்கரசர் வயிற்று வலி பூரணமாக குணமடைந்தது. “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்ற தேவார பாடலை பாடியருளினார். அது முதல் அப்பர் பல தலங்களுக்கு சென்று உழவார திருப்பணியும் தேவார பாடல்கள் இயற்றி பாடியும் சைவத்திற்கு தொண்டு செய்தார்கள். தேவாரம் முதலில் பாடப்பட்ட திருத்தலம் இது. இங்கு அப்பருக்கு தனிசன்னதி. சிரித்த முகத்துடன் அமர்ந்த திருமேனி. தலை மாலை, உழவாரத்துடன் அழகிய திருமேனி. திலகவதியார் உருவ சிலையும் உள்ளது. அப்பர் இங்குதான் உழவார திருப்பணி தொடங்கினார். மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சிவன் பார்வதி உருவம் உள்ளது, அப்பருக்கு திருமண கோலத்தில் காட்சி தந்த தலம்.

     திருஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டி அருளிய ஸ்தலம். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இதனால் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும். இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகில் இருந்த சித்த வடமடத்தில் தங்கி திருவடி தீட்சை பெற்றதும் இந்த தலமே. இறைவன் தேரில் வந்ததால் கோயில் தேர் போன்று பதுமைகளால் அலங்கரிக்கபட்டு நிழல் பூமியில் விழாதபடிக் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கர்ப்பக்கிரக விமானத்தை பார்த்துத்தான் ராஜராஜசோழன் பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மூலவர் பெரிய சிவலிங்க திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கம் (பசுபதிநாதர்) மற்றும் நிறைய சிவலிங்க திருமேனிகள் உள்ளன. கோயில் கோபுர வாயிலின் இருபுறமும் பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு உள்ள 108 கரணங்கள் நடன காலை சிற்பங்களாக வடிவமைக்க பட்டுள்ளன. வலது புறத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

தேவாரம்:

சலம் பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலம் உன்னை மறந்தறியேன்
உன்னமாம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீரட்டானத்துறை அம்மானே

கூற்றாயின வாறு விலக்ககிலீர்
     கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாயன அடிக்கே இரவும் பகலும்
     பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
     குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
     வீரட்டானத்துறை அம்மானே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் வழியில் பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை,  பண்ருட்டி அஞ்சல் கடலூர் மாவட்டம். -607 106.

தொலைபேசி:

கே.சேகர் 04142 – 240317,  98419 62089

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...