இறைவன்: | வெள்ளடையீஸ்வரர் |
இறைவி: | காவியங்கண்ணியம்மை |
தீர்த்தம்: | பால்கிணறு |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 13 வது ஆலயம். இறைவன் சதுர வடிவ பாணலிங்கமாக காட்சி தருகிறார். சுந்தரருக்கு பொதி சோறு வழங்கும் விழா இத்தலத்தின் சிறப்பாகும் . வெயிலின் காரணமாகவும், தண்ணீரின் தாகத்துடனும், பசியாலும் வந்த சுந்தரருக்கும், அவருடன் வந்த அடியார்களுக்கும் சிவபெருமான், வேதியர் வடிவில் தோன்றி, பெரிய பந்தல் ஏற்பாடு செய்து அவர்களை களைப்பாறச் செய்ததோடு, சுவையான குளிர்ந்த நீரையும், பசி தீர பொதி சோற்றினையும் தந்தருளினார். இதனை நினைவுகூரும் வகையில் இக்கோயிலில் சுந்தரருக்கு பொதிசோறு வழங்கும் விழா ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. அப்போது பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மூலவருக்கும், சுந்தரருக்கும் சிறப்புப்பூசைகள் செய்யப்படுகின்றன. இவ்விழாவினை கட்டமது படைப்பு விழா என்றும் கூறுவர்.
திருஞானசம்பந்தர் சமணர்களை கொல்ல காரணமாய் இருந்த பாபம் தீர இறைவன் காசிக்கு பதில் கங்கை நதியை இத்தலத்தில் உள்ள கிணற்றில் வரவழைத்து அதில் நீராட கூறி பாபம் நீக்கினார். தெரியாமல் செய்த பாபம் தீர இங்கு வேண்டினால் நல்லது. இங்கு முருகர் வள்ளி தெய்வையனையுடன் வடக்கு நோக்கி அருள் பாலிப்பாதால் அவரை குருதெய்வமாக வழிபடுகிறார்கள்.
தேவாரம்:
இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழி நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகர பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
சீர்காழியில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 7.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு வெள்ளடையீஸ்வரர் திருக்கோயில், திருக்குருகாவூர் , சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609115.
தொலைபேசி:
சந்திரசேகரகுருக்கள் 9245612705